துஷ்ட நிக்கிரக சிரிஷ்டி. பரிபாலனஎன்பது. வேதவாக்கு. நடைமுறைஉலகில் எங்கும்எப்போதும். நல்லதே நடைபெற வேண்டும் என்பது எல்லா மதங்களும் உபதேசிக்கும்ஒன்றாகும். இந்த கையிலேயே தீபாவளி பண்டிகையும் நன்மையும். தர்மமும் தொடர்ந்து உலகத்திலும்நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் மறவாது இருக்க மானிட இனத்திற்கு ஒவ்வொரு வருடமும்தொடர்ந்து நினைவூட்டும் பண்டிகை ஆகும்
ஆரம்ப காலத்தில் இந்தியாவில் இலங்கையில். மலேசியாவில் சிங்கப்பூரில் கொண்டாடப்பட்ட போதும் இன்று இந்துக்கள் வாழும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. முக்கியமாக இந்துக்கள் வாழும்நாடுகளில் உள்ள பாராளுமன்றங்களில் கூடத் தீபாவளி இன்று மற்ற இனத்தவர்களாலும். கொண்டாடப்படுகிறது. இன்று உலகப் பந்தில். ஒவ்வொரு மூலையிலும். இந்துக்களாலும். அன்பையும். சமாதானத்தையும். உறவையும். சகோதரத்துவத்தையும். விரும்பும். அனைவராலும். கொண்டாடப்படுகிறது.
தீபாவளி பற்றிய பல்வேறு. விதமான. புராண கதைகள் இருந்த போதும். ராமபிரான் வனவாசம் முடிந்துசீதாதேவி யுடன் தனதுதலை நகர் திரும்பிய நாளேதீபாவளி என்று வட இந்திய இந்து மக்களும், தென்னிந்தியாவில் நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா வதம்செய்த நாளில் நரகாசுரனின்விருப்பத்தின் பேரில் மக்கள். தீமை அழிந்ததாக கொண்டாடும் நாளே தீபாவளி. என்றும். பிரதேசங்களுக்கு ஏற்ப சந்தோஷத்தை உருவாக்கிய நாள்இருள் விலகி ஒளி தோன்றிய நாள். தீபாவளி நன்னாள் ஆகும் வீதிகள் தோறும். தீபங்கள் ஆவழியாக [வரிசையாக] வைக்கப்பட்ட நாள்தீபாவளி. இறுதியாகக் கூறுவோமாயில். இந்த நாளில். துன்பங்களும். இருளும். ஒளி மூலமாக விலகிஅன்பு இன்பம் சகோதரத்துவம் உருவாக நினைவூட்டும் நாள் ஆகும். இந்நாளில் பரஸ்பரம் சகோதரத்துவம் அன்பு உணவு உறவு உடை பரிமாற்றம் எல்லாம். நிறைய பெறும் நாள் ஆகும். எனவே இத் திருநாளில் தீபங்கள் ஒளிர தீமைகள் விலகி நன்மைகள் பரவ எல்லோரையும். அன்புடன் வாழ்த்துவோமா?
நியூசிலாந்தில் வாழும்அன்பு
உள்ளங்கள் எல்லோருக்கும் எமது அன்பு நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்
– பத்மன்குருக்கள் குடும்பத்தினர்,வெலிங்டன்