fbpx
11.1 C
New Zealand
Friday, September 13, 2024

The Only Sri Lankan Community Newspaper in New Zealand

கண்ணதாசனின் கடைசி காவியம்! – The last poem of Kannadasan! | Dr Lakshman Sockalingam | Auckland

Must read

SrilankaNZ
SrilankaNZhttps://www.srilankanz.co.nz
ශ්‍රී LankaNZ is a free distributed Sri Lankan Community Newspaper that aims to reach a Sri Lankan population of over 18,000 all over New Zealand. The demand for entertainment in literacy media itself gave birth to ශ්‍රී LankaNZ

நடுவில் புனிதர் வடிவம் பெறுகிறார் எண்ணில்லாத அதிசயங்கள்  செய்து காட்டவே ஒரு புண்ணியரின் மடியினிலே  புதல்வராகிறார்…’புனித அந்தோணியார் படத்தில் இடம்பெற்ற இந்த  இனிமையான பாடலைக் கேட்கும்  போதெல்லாம் தேவன் அருகில் நாம் இருப்பது போல ஒரு பரவச நிலையை உருவாக்கி தந்தவர்கள் கவியரரும் மெல்லிசை மன்னரும். மக்களை ரட்சிக்க இயேசு இவ்வுலகிற்கு வந்தார். அவர் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகிறார்கள்.  ஒரு எளிய குடும்பத்தில்  அவர் பிறக்கிறார்.        கண்ணதாசன்

 ‘அடியவர்கள் மடியினிலே ஆண்டவரோ பிள்ளை..

அரவணைக்கும் அடியவரோ இறைவனுக்கும் அன்னை…’

அற்புதமான எளிமையான வரிகள்.  இறைவனுக்கு அன்னையாக இருக்கும் பாக்கியம் அன்னை மரியாளுக்கு கிடைத்தது.உலக மக்களை ரட்சிக்க ஆண்டவர் தானாகவே விண்ணுலகில்  இருந்து வருகிறார் என்றும் அவர் பார்வை பட்டால் போதும்  நம் பாவம் யாவும் தீரும், கைகள் தொட்டால் போதும் உடன் கவலை எல்லாம் தீரும் என்றும் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதப்பட்ட பாடல் அது.  ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இப்பாடலை கேட்டால் நமக்குள் புத்துணர்வு ஏற்படும் எல்லா நன்மைகளும் நம்மைத் தேடி வரும்.  இயேசு பிறப்பு தொடர்பான நற்செய்தி வசனங்கள் :     திமொத்தேயு 1:15

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.(திமொத்தேயு முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புனித ஆயர். திமொத்தேயு என்றால் கடவுளை போற்றுபவர் கடவுளால் போற்றப் பெருபவர் என்று அர்த்தம்.)

ஏசையா 9:6 :

‘நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்

கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும் அவர் நாமம் அதிசயமானவர்

ஆலோசனைக் கர்த்தா வல்லமையுள்ள தேவன்

நித்திய பிதா  மாதானப்பிரபு என்னப்படும்.    மத்தேயு 1:23 :

இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்;

அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள் என்று சொன்னான்.

இம்மானுவேல் என்பதற்கு தேவன்  நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.

அர்த்தமுள்ள இந்துமதம் படைத்த கண்ணதாசன்தான் தேவன் பெருமைகளைச் சொல்லும் ‘இயேசு காவியம்’ படைத்தார். இது அவரின் கடைசி காவியம். பைபிளைத் தழுவி அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதப்பட்டது. இயேசு பெருமான் அருள் பாலித்தார். 15 நாட்கள் தினமும் 8 மணி நேரம் வேலை செய்து இதை முடித்தேன் என்று கவிஞர் சொல்லி இருக்கிறார்.

கவிஞர் கண்ணதாசன் மறைவுக்குப் பிறகு 1982 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.  அப்போதைய முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள்  முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். இயேசுவின் பிறப்பு முதல் தொடங்கி அவரின் வாலிப பருவம்,  நிகழ்த்திய அற்புதங்கள், அவரின் சீடர்கள், சிலுவையில் இடுதல் பின்னர் மூன்றாம் நாள் உயிர்தெழுந்தது வரையில் கவியரசர்  ரசிக்கும்படி கவிதையாய் படைத்துள்ளார்.

‘துல்லிய பட்டுப் போன்ற

தூயவள் மரியாள் கையில்

மெல்லிய பாலன் இயேசு

விளக்கெனப் புன்ன கைத்தான்!

நல்லவர் உள்ளம் போல

நலம்பெறப் பிறந்த செல்வன்

இல்லைஎன் னாத வாறு

இருகரம் விரித்து நின்றான்!

மாளிகையும் இல்லை காண் மஞ்சமில்லை என்றாலும்

ஏழைத் தொழுவில் வந்த இறைமகனே தாலேலோ!
மாணிக்கத் தொட்டிலுக்கு வாய்க்காத பெருமையெல்லாம்

ஆநிரைத் தொழுவினுக்கு ஆரளித்தார்  எங்கோவே!

எவ்விடத்தில் பிறந்தாலும் எப்படித்தான் வாழ்ந்தாலும்

செவ்வானத் திருக்குமரன் தேசமெல்லாம்புகழ் பெறுவான் ‘

தேவன் பிறந்த நிகழ்வை தனது கவிதைகளால் இப்படி போற்றிப்  பாடியுள்ளார்.

கிறிஸ்துமஸ் என்றதும் நம் நினைவுக்கு வருவது ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ . நிக்கோலஸ் என்ற புனித பாதிரியார் துருக்கியில் பிஷப்பாக  இருந்த போது பல ஏழைகளின் துயர் நீங்க உதவி செய்தார். அவர் நினைவாகவே ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ கதாபாத்திரம் உருவானது. அந்த தாத்தா வந்தாலே குழந்தைகள் குதூகலமாகிவிடுவார்கள். நிறைய பரிசுகளை தருவார்.

It’s Christmas

Jingle bells, Jingle bells

Jingle all the way

oh, what fun it is to ride

In a one horse open sleigh

கிறிஸ்துமஸ் தாத்தாவோடு தொடர்புடைய ஆங்கிலப் பாடல் இது. கிண்கிணி கிண்கிணி என்ற மணியோசையோடு அவர் வருகிறார்.சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பில் உருவான ‘தவப்புதல்வன்’ படத்தில் அவர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் நடித்திருப்பார். அப்போது ‘கிண்கிணி கிணி கிணி என வரும் மாதா கோயில் மணியோசை, கண்மணி பொன்மணி என துள்ளிடும் பிள்ளைகளுக்கு தாத்தா கூறும் அருளோசை, கிறிஸ்துமஸ் தாத்தா கூறும் அருளோசை…’ என்று பாட்டுப்பாடி குழந்தைகளுக்கு பரிசு வழங்குவார்.

ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல்ஸ் என்ற ஆங்கில வரிகளுக்கு பொருத்தமாக கிண்கிணி கிணி பாடலை எழுதினார் கவியரசர். கிறிஸ்துமஸ் தினத்திற்கு முதல் நாள் இரவு கிறிஸ்துமஸ் தாத்தா வீட்டுக்கு வந்து குழந்தைகளுக்கு பரிசுகள் கொடுப்பதாக ‘புனித நிக்கோலஸ் ஒரு வருகை’ (A VISIT FROM ST.NICHOLAS) என்ற ஆங்கிலப் பாடலில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆங்கில கவிஞர் ‘கிளமாண்ட் கிளார்க் மூர்’ என்பவர் 1823 ஆம் ஆண்டில் எழுதியுள்ளார். கிறிஸ்துமஸ்   புனிதர் நிக்கோலஸ் அவர்களை கிறிஸ்துமஸ் தாத்தாவாக முதன்முதலில் பாடல் எழுதினார்.

‘Twas the night before Christmas, when all through the house

Not a creature was stirring, not even a mouse;

The stockings were hung by the chimney with care,

In hopes that St. Nicholas soon would be there;

இந்த பாடல் குழந்தைகள் கிறிஸ்துமஸ் முதல் நாள் இரவு நம்பிக்கையோடு புகைபோக்கி அருகில் காலுறைகளை தொங்கவிட்டு கிறிஸ்துமஸ் தாத்தா தரப்போகும் பரிசுகளுக்காக காத்திருப்பதாகவும். அவ்வாறு அவர் தந்த பிறகு அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிப்பதாக எழுதியுள்ளார்.மதம் சார்ந்த நம்பிக்கைகள் சந்தோஷங்கள் பற்றி எழுதப்பட்ட காரணத்தால் இந்த பாடல் பெரும் புகழைப்பெற்றது.

கிறிஸ்துமஸ் தாத்தாவை உலகம் முழுவதும் வரவேற்க காத்திருக்க ஆரம்பித்தார்கள். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஜெர்மனியில் புனித போனிபேஸ் என்பாரால் அடையாளம் கட்டப்பட்ட ஒக் மரம் தான் கிறிஸ்துமஸ் மரமானது. தேவன் மூன்றாம் நாள் உயிர்தெழுந்தது போல இந்த மரம் வேரோடு பிடிங்கி எறியப்பட்ட போதும் சில நாட்களிலே அங்கு ஓக் மரக்கன்று முளைக்கத் தொடங்கி விட்டதுதான் அதற்கு காரணம். ஒவ்வொரு நாட்டிலும் கிறிஸ்துமஸ் மரம் வேறுபடுகிறது.

உலகளவில் 16 வகையான கிறிஸ்துமஸ் மரங்கள் உள்ளன. யேசு பிறந்த போது வானில் தோன்றிய ஒரு நட்சத்திரத்தை பின்பற்றி சில ஞானிகள் …கஸ்பார், மெல்கியோர், பல்தசார் ஆகியோர் அவரை வணங்க சென்றார்கள். அவர்களுக்கு வழி காட்டிய நட்சத்திரத்தை அடையாளப்படுத்தவே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நட்சத்திரங்கள் இடம்பெற ஆரம்பித்தன.தேவன் இவ்வுலகில் அவதரித்த தினத்தை உலகம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்கவும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பை நட்பை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம். தீமை அழிந்து நன்மை ஆட்சி செய்ய வேண்டும்.கவிஞர் வாலி அவர்கள் தனது பாடல்களில் தேவனைப் போற்றி இவ்வாறு பாடியுள்ளார்:

‘தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே

பாவிகள் யாருமில்லை, பேதங்கள் ஏதுமில்லை

மேரியின் பூமடி மேவிய தேவனின் கோவிலிலே

யாவரும் தீபங்களே

பாவிகள் யாருமில்லை பேதங்கள் ஏதுமில்லை

என்றும்… மனங்கள் ஒன்றான போது ‘தேவன் வேதமும்

கண்ணன் கீதையும் ஒரு பாதையில் இங்கு சங்கமம்..’

என்றும் எழுதியுள்ளார். ஏசய்யா 41:10    Bible

‘கவலைப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன். பயப்படாதே,  நான் உனது தேவன். நான் உன்னைப் பலமுள்ளவனாகச் செய்திருக்கிறேன். நான் உனக்கு உதவுவேன். நான் எனது நன்மையாகிய வலது கையால் உனக்கு உதவி செய்வேன்.’ உலக மக்களை ரட்சிக்க தேவன் மீண்டும் மீண்டும் இவ்வுலகிற்கு வருவார். நம்புங்கள் அவரை. கவியரசர் பாடலை மீண்டும் கொண்டு வந்து இக்கட்டுரையை முடிக்கிறேன்.

மண்ணிடை இயேசு மறுபடி வருவார் என்பது சத்தியமே! புண்கள் இருக்கும் வரையில் மருந்து

தேவை நித்தியமே விண்ணர சமையும் உலகம் முழுதும் இதுதான் தத்துவமே! எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே இயேசுவை நம்புவமே!

 

By Dr Lakshman Sockalingam – Auckland

Facebook Comments Box

ශ්‍රීLankaNZ සමාජ සත්කාරය අඛණ්ඩවම පාඨකයන් වෙත රැගෙන එන්නට ඔබගේ කාරුණික දායකත්වය අත්‍යාවශ්‍යමය. එය ස්වෙච්ඡා සේවක කණ්ඩායමට මෙන්ම පුවත්පතට ලිපි සපයන සම්පත් දායකයින්ට ද ඉමහත් ධෛර්යයක්වනු ඇත. ශ්‍රී ලන්කන්ස් පුවත්පතේ ඉදිරි ගමනට අත දෙන්න.

BECOME A SUPPORTER
- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img
spot_img

Latest article

Consider a contribution…

ශ්‍රී LankaNZ(ශ්‍රී ලංකන්ස්) is a free distributed Sri Lankan Community Newspaper that aims to reach a Sri Lankan population all over New Zealand. If you would like to appreciate our commitment, please consider a contribution.