ஒரு ஊரில் மழை அதிகமாக பெய்து கொண்டிருந்து. எனவே ஏரி, குளம் குட்டைகள் எல்லாம் தண்ணீர் நிறைந்து வழிந்தன. ஏரியில் தண்ணீர் மிகுந்து குளிர்ந்து காணப்பட்டது. “இங்கு இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் நான் நிச்சயமாக இறந்து விடுவேன், என்ன செய்வது “என்று யோசனை செய்தது ஒரு தவளை. பக்கத்தில் ஒரு கிணறுஇருந்தது. கிணற்றுத்
தண்ணீர் நிச்சயமாக வெது வெதுப்பானத்தாகத்தான் இருக்கும் என்று நினைத்து அந்த தவளை , உடனே கிணற்றில் குதித்தது.
அப்போது அந்த கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை மிக்க மகிழ்ச்சியுடன் அந்த புதிய தவளையை வரவேற்றது. “வாருங்கள், தவளையாரே நான் பேசுவதற்கு ஆள் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே தன்னிடம் இருந்த உணவு பொருட்களை அதனுடன் பகிர்ந்து உண்ண ஆரம்பித்தது.
இதைப் பார்த்த மற்ற தவளைகள்
“நமக்கே இங்குள்ள உணவு பற்ற வில்லை . இதை பங்கு போட இந்த புது தவளை வேறு வந்துவிட்டது” என்று கவலைப்பட்டன.
எப்படி இந்த தவளையை துரத்தி விடலாம் என்று யோசிக்க ஆரம்பித்தன.
கிணற்றுத் தவளையும், ஏரித்தவளையும் பேசிக் கொண்டிருந்ததை மற்ற தவளைகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.
அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையைப் பார்த்துக் கேட்டது,
“நண்பனே இத்தனை நாட்களாக நீ எங்கு தங்கி இருந்தாய்?”
“நான் ஏரியில் தங்கியிருந்தேன்” என்றது ஏரித் தவளை. “ஏரியா, அப்படி என்றால் என்ன? “என்று கேட்டது கிணற்றுத் தவளை. இந்த கிணற்றைப் போல பல மடங்கு பெரிய நீர் நிலை , ஏரி. அதில் மீன், ஆமை முதலை ஆகிய
மிருகங்கள் இருக்கும் என்றது ஏரித்தவளை.இந்த கிணற்றைப் போன்றதில் எப்படி இத்தனை உயிர் இனங்கள் வாழ முடியும் ” என்று கேட்டது கிணற்றுத் தவளை.
இந்த கிணற்றை விட மிகவும் பெரியது
ஏரி” என்றது ஏரித்தவளை.கிணற்றுத் தவளை இதை நம்ப மறுத்தது.
“நண்பா, நீ பொய் சொல்கிராய். இந்த கிணற்றை விட பெரிய நீர் நிலை இந்த உலகில் எதுவும் இல்லை” என்று அடித்து சொல்லியது.ஏரித் தவளை எவ்வளவோ சொல்லியும் , கிணற்றுத் தவளை நம்ம மறுத்தது. கூட இருந்த மற்ற தவளைகளும் நம்பவில்லை. எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து நய்யாடிச் சிரித்தன. “நீ பொய்யன், புறட்டன். உன்னை நம்பி இங்கே வைத்திருந்தால்
எங்களுக்குத் தான் ஆபத்து “என்று சொல்லி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன.
அப்போது கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கிய போது,அதனுள் தாவிச் சென்று குதித்த ஏரித் தவளை தோண்டித் தண்ணீருடன் மேலே சென்றது.இந்த முட்டாள்களிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது என்று தாவிக் குதித்து ஏரியை நோக்கி சென்றது.
ஆகவே குழந்தைகளே நாம் முட்டாள்களிடன் வாதாடுவதை விட அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்வதே சிறந்தது. ”
குமுதம் சதாசிவம்.