fbpx
17.1 C
New Zealand
Sunday, October 11, 2026

The Only Sri Lankan Community Newspaper in New Zealand

உண்மையே வெல்லும் – Truth Will Prevail | Kumutham Satasivam | Auckland

Must read

SrilankaNZ
SrilankaNZhttps://www.srilankanz.co.nz
ශ්‍රී LankaNZ is a free distributed Sri Lankan Community Newspaper that aims to reach a Sri Lankan population of over 18,000 all over New Zealand. The demand for entertainment in literacy media itself gave birth to ශ්‍රී LankaNZ

பழமுதிர் சோலை என்ற நாட்டை பழவர்த்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தார். அவர் நீதி நெறி தவறாதவர். வாய்மை நிரம்பியவர். உண்மை பேசுபவர்.தன்னைப் போலவே தன் குடிமக்களும் இருக்க வேண்டும் என்று விரும்புபவர். அவருக்கு வெகு நாட்களாகியும் குழந்தை பாக்கியம் இல்லை. தனக்குப் பின் தன் நாட்டை ஆளத் தக்க வாரிசுகள் இல்லாததால் நீதியும், நேர்மையும் தவறாத , அறிவு மிகுந்த ஒரு இளைஞ்ஞனை மன்னனாக்க முடிவு செய்தார்.

மன்னன் அதற்காக யாருடைய உதவியையும் நாடவில்லை. அவர் சிறந்த அறிவாளியாக இருந்ததால், பல நாட்களாக யோசனை செய்து ஒரு முடிவு செய்தார்.

நாட்டிலுள்ள வீரம் மிகுந்த இளைஞர்களை எல்லாம் அழைத்து வில் போட்டி நடத்தினார். அதில் வென்றவர்களை வைத்து வாள் போட்டி நடத்தினார். அதன் பிறகு வாய் மொழி போட்டி என்று பல வித பரீட்சைகள் செய்து சோதித்தார். கடைசியாக பத்து இளைஞர்களை தேர்வு செய்தார்.பிறகு அவர்களை தனித்தனியாக அழைத்து ஒவ்வொருவருக்கும்  ஒரு செடியின் விதையைக் கொடுத்தார்.

இந்த விதையை ஒரு தொட்டியில் போட்டு வளர்த்து, ஆறு மாதம் கழித்து என்னிடத்தில் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும்.இதுவே என்னுடைய கடைசி சோதனை,” என்றார்.

பத்து இளைஞ்ஞர்களும் அந்த விதையை வாங்கிக் கொண்டனர். அதில் சாந்தனு என்ற இளைஞர் ஒருவரும் இருந்தார்.எல்லோரும் மன்னன் சொன்னபடி அந்த விதையை வளர்க்க ஆரம்பித்தார்கள். அதற்காக எரு மற்றும்  உரம் போட்டு நன்கு பார்த்துக் கொண்டனர்.சாந்தனுவும் தன்னுடைய விதையை நன்றாக கவனித்துக் கொண்டான். ஆனால் அவனுடைய துரதிர்ஷ்டம் அவனுடைய விதை சரியாக முளைத்து செடியாக வில்லை. அவன் மற்றவர்கள் வீட்டிற்கு சென்று அவர்களுடைய செடி  எப்படி

வளர்ந்து இருக்கின்றது என்று பார்க்கச் சென்றான். என்ன ஆச்சரியம்! அவர்களுடைய விதையானது நன்றாக இலை விட்டு  செழிப்பாக வளர்ந்து இருந்தது.

தன் வீட்டிற்கு வந்த சாந்தனு , தன்னுடைய விதையை எப்படி எல்லாமோ முயன்று அதை செடியாக்க முயன்றான். ஆனால் என்ன காரணத்தாலோ எல்லாம்  தோல்வியில்  முடிந்தது. அந்த விதை முளைக்கவேயில்லை.

முளைக்காத விதையை மன்னன் தனக்கு தந்திரப்பாரோ என்ற எண்ணம் அவனுக்கு வந்தது.” சே என்ன மோசமான எண்ணம். எல்லோருக்கும் கொடுத்தது போல் தான் எனக்கும் ஒரு விதையைக் கொடுத்தார். என்னுடைய துரதிருஷ்டம் என்னுடைய விதை சரியாக முளைக்கவில்லை.ஆனால் மற்றவர்களுடைய அதிர்ஷ்டம் விதை நன்கு வளர்ந்து இருக்கின்றது. ஆறு மாதம் பொறுத்திருந்து பார்ப்போம். அப்போதும் விதை முளைக்காமல் போனால், மன்னரிடம் உண்மையை சொல்லி விடலாம். அதனால் மன்னர் கோபம் கொண்டு எனக்கு தண்டனை கொடுத்தாலும் நான் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்,” என்று எண்ணினான்.

ஆறு மாதம் சென்றன.

போட்டியாளர்கள் அனைவரும் மிக்க சந்தோக்ஷத்துடன் அவர்களுடைய தொட்டிகளை எடுத்துக் கொண்டு வந்தனர்.அவர்களுடைய செடிகள் இரண்டு அடி உயரத்திற்கு அழகாக வளர்ந்து இருந்தது.

மன்னர் எல்லோருடைய தொட்டிகளை யும் பார்த்துக் கொண்டே வந்தார் . அவர் இதழில் புன் முறுவல் ஒன்று நெளிந்தது.சாந்தனுவிடம் வந்த போது அவனுடைய காலித் தொட்டியைப் பார்த்து அவர் முகம் மாறியது. மிக்க அச்சத்துடன் சாந்தனு மன்னனைப் பார்த்தான்.

“உன்னுடைய பெயர் என்ன? ”

“என் பெயர் சாந்தனு. நான் ஆறு மாதங்களாக எத்தனை  கஷ்டப்பட்டு இந்த விதையை முளைக்க பாடுபட்டேன்.ஆனால் என்னுடைய துரதிர்ஷ்டம் இந்த விதை முளைக்கேவே இல்லை.என்னை மன்னித்து விடுங்கள் மன்னரே” என்று மண்டியிட்டு கெஞ்சினான்.

மன்னன் அவனை தூக்கி நிறுத்தி தன் மார்போடு அணைத்துக் கொண்டார்.

“எதிர்கால மன்னனை தேர்ந்தெடுக்கவே இப்போட்டிகளை வைத்தேன். அதில் வெற்றிபெற்றதாக சாந்தனுவை அறிவிக்கின்றேன்.

இவன் தான் எதிர்கால மன்னன் ,” என்றார். இதைக்கேட்ட எல்லோரும் வியப்படைந்தனர். முதல் மந்திரி எழுந்து ,” அரசே தாங்கள் சொன்னபடி ஒரு செடியைக் கூட வளர்க்க தெரியாத இந்த வாலிபனா எதிர்கால மன்னன்? மன்னனுடைய கட்டளைக்கு கீழ் பணிந்து செடியை பராமரிக்காமல் சோம்பேரித்தனமாக இருந்து விட்டு

வெறும் தொட்டியைக் காட்டிய இவரா

இந்த நாட்டு மன்னன்,” என்று கேட்டார்.

அமைச்சரே நீங்கள் தவறாக புரிந்து

கொண்டீர்கள். இவன் அவனால் ஆகக்கூடிய எல்லாவித முயற்சியும் செய்து பார்த்தான் என்பதை நான்

நம்புகின்றேன். ஏன் தெரியுமா? நான்

பத்து இளஞ்ஞர்களுக்கும் செடி வளர்க்க கொடுத்த பத்து விதைகளும் நன்றாக வேக வைத்த,  உலர்ந்த விதைகள். எனவே அதில் எந்த செடியும் முளைக்காது.என்னிடம் இருந்து பரிசுகள் பெறுவதற்காக இந்த இளைஞர்கள் முளைக்காத விதைகளை எறிந்து விட்டு, அதற்கு பதிலாக நல்ல விதைகளை பயிரிட்டு, செடியாக்கி கொண்டு வந்திருக்கின்றனர். ஆனால் சாந்தனு அப்படி செய்யாமல் ஆறு மாதம் எப்படியாவது முளைக்க வைக்க எல்லாவித சிரமங்களையும் எடுத்துக் கொண்டான். விதை முளைக்காத போதும் அதை உள்ளபடியே என்னிடம் அறிவிக்க காலித் தொட்டியுடன் வந்தான். இப்படி  நேர்மையாக நடந்து கொண்டதன் மூலமாக அவனால் நாடு நிச்சயம் செழிக்கும் என்று தான் அவனை மன்னனாக அறிவித்தேன்.

மன்னரின்  அறிவிக் கூர்மையை எல்லோரும் வியந்து பாராட்டினர்.

மற்ற செடி வளர்த்த ஏனைய இளைஞர்கள் அரசனிடம் மன்னிப்புக் கோரினர்.அரசனும் அவர்களை மன்னித்தார்.

எனவே குழந்தைகளே உண்மை எப்பொழதும் வெல்லும். ஆகவே உண்மையே பேச வேண்டும்.

குமுதம் சதாசிவம்.
By Kumutham Satasivam – Auckland

 

Facebook Comments Box

ශ්‍රීLankaNZ සමාජ සත්කාරය අඛණ්ඩවම පාඨකයන් වෙත රැගෙන එන්නට ඔබගේ කාරුණික දායකත්වය අත්‍යාවශ්‍යමය. එය ස්වෙච්ඡා සේවක කණ්ඩායමට මෙන්ම පුවත්පතට ලිපි සපයන සම්පත් දායකයින්ට ද ඉමහත් ධෛර්යයක්වනු ඇත. ශ්‍රී ලන්කන්ස් පුවත්පතේ ඉදිරි ගමනට අත දෙන්න.

BECOME A SUPPORTER
- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img
spot_img

Latest article

Consider a contribution…

ශ්‍රී LankaNZ(ශ්‍රී ලංකන්ස්) is a free distributed Sri Lankan Community Newspaper that aims to reach a Sri Lankan population all over New Zealand. If you would like to appreciate our commitment, please consider a contribution.