1996 ஆம் ஆண்டு எங்களுக்கு நியூசிலாந்தில் வந்து குடியேறுவதற்கு விசா
கிடைத்த போது நாம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை!
அகமகிழ்ந்தோம் ! துள்ளிக் குதித்தோம்,!! ஆரவாரப்பட்டுப்
புதுப்புதுக் கனவுகளை எல்லாம் அன்றாடம் கண்டோம்.!!
ஓர் ஆறு மாத காலம்
நியூசிலாந்து எப்படி இருக்கும், அங்கு என்ன கிடைக்கும், நாம் எதை எதை எல்லாம்
புதிதாக அனுபவிக்கப் போகிறோம் என்று நன்கு ஆராய்ச்சி செய்தோம், எங்களுக்குத் தேவையேற்படலாம் என்றெண்ணி எத்தனையோ பொருள்களையெல்லாம் தேடிச் சேர்த்துக்கொண்டோம்.
அத்துடன், சொந்த பந்தங்கள், நண்பர்கள் எல்லோருக்கும் சற்றே குழம்பிய மனத்துடன் நன்கே பிரியா விடையும் கொடுத்துவந்தோம்.
இப்போ எங்களுக்குத் தெரியாமல் 26 வருடங்கள் கால ஓட்டத்தில் உருண்டோடிப் போய்விட்டன எத்தனை எத்தனை அனுபவங்கள் !
முன்னேற்றங்களுடன் சந்தோசமான மனம், எண்ணம் , தளர்வடையாத இனிய வாழ்க்கை என எமக்கு அள்ளித்தந்தது இந்த நல்வளம் செழிக்கும் நியூசிலாந்து மண் என்றால் மிகையில்லை..
இன்னும் எத்தனை எத்தனை செல்வங்களையும் சிறப்பையும் இந்த புனித
நாடு தந்து கொண்டே இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை !
ஆனாலும் ,அவற்றை எல்லாம் அனுபவித்துக்கொண்டு இன்னும் இவ்வுலகில் எத்தனை வருடங்கள் வாழப் போகிறோம் என்பது தான் எனக்கு மட்டுமன்று எங்கள் ஒருவருக்குமே தெரியாத புரியாத ஒரு பெரிய புதிர் ஆகும்.
ஒன்று மட்டும் தெளிவான உண்மை… என்றோ ஒரு நாள் நாம் எல்லோரும் இன்னொரு
பெரிய, புதிய வளமான உலகத்துக்கு ஒரு வழிப் பயணச்சீட்டுடன் தனியாகப்
போய்விடுவோம் என்பது தான் அது !
இதை நன்றாக உணர்ந்தபின் அந்த உலகம் எப்படி இருக்கும், அங்கு யார் யாரெல்லாம் இருப்பர்கள் ? அங்கும் சீராகவும் சிறப்பாகவும் வாழ்வதற்கு என்ன என்ன எல்லாம் எமக்குத் தேவை, என்று ஆயத்தப்படுத்துவது நல்லதன்றோ ?
அப்படி ஒரு பாதையைத் தெரிந்து எடுத்தால் இறுதியில் தெரியாத ஒரு உலகத்தில் மாட்டித் திக்கு தெரியாமல் திண்டாடி, தடுமாறி மனவேதனைப்படுவதைத் தவிர்க்க முடியுமன்றோ ?
அறுபத்தியொரு அகவையை எட்டும் இந் நேரத்தில் இன்னும் இருக்கப்போகும் பத்தோ இருபது ஆண்டுகளிலும் அடுத்த பயணத்துக்கான ஆயத்தங்களைச் செய்யலாம் என்று ஆர்வப்படுகிறேன். அதன் நிமித்தம் நான் மேற்கொண்டிருந்த ஆரம்பப் பாடத்தில் கற்றவைதான்…… அடுத்த உலகில் எனக்கென்று ஒரு பெயர், எனக்கென்று உறவு, ஊர், பதவி, பட்டம், பணம், பொருள், இனம், மொழி, சமயம், விருப்பு, வெறுப்பு என்பவை இருக்கா என்பதும் , ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ நான் இருப்பேனென்பதும் தெரியாது, இவ்வுலகில் இப்போது ஆசைப்படுவது எதுவும் அங்கே இருக்குமா இருக்காதா என்பதும் தெரியாது என்பது வெளிச்சம்……
இனி வரும் அஸ்தமன காலத்தில் படித்தபடி அளவுக்கு மிஞ்சிய பற்றையும் பிடிப்பையும் தளர்த்தி நடக்க முனைகிறேன்….. அதன் மூலம் மனச்சுமை
குறைகிறதை உணர்கிறேன்….. இவ்வழி சென்று அடுத்த ஒருவழிப் பயணச்சீட்டு
கிடைத்தவுடன் சஞ்சலப்படாமல் புது உலகம் புக ஆர்வப்படுகிறேன்.
எங்கள் பயணங்கள் எல்லாம் இந்த உலகத்துடன் முடியப்போவதில்லை அகண்ட பிரபஞ்சத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கும்.!!
-அந்த ஒரு நம்பிக்கையுட