வணக்கம் சித்திரை புது வருஷம் இவ்விழாவானது இலங்கை இந்தியா மலேசியா சிங்கப்பூர் வியட்நாம் முதலிய தென்னாசிய நாடுகள் முழுவதிலும் உலகெங்கும் வாழும் இந்துக்கள் கொண்டாடும் புது வருஷம் ஆகும் இன்று உலகம் முழுவதும் பரந்து வாழும் இந்துக்கள் புத்த சமயத்தவர்கள் எல்லோரும் இந்த விழாவை கொண்டாடுகின்றனர்.
இந்து மதம் வாழ்க்கைக்கு வழிகாட்டி இம்மதத்தில் அஸ்ட்ராலஜி வானியல் சாஸ்திரம் வாழ்வியல் இரண்டுமே பின்னிப் பிணைந்தவை ஆகும் சூரியன் முதலாக 9 கிரகங்களின் சஞ்சாரங்களின் மூலம் காலம் நேரம் வாழ்க்கை என்பன முன்னோர்களால் நிர்ணயிக்கப்பட்டன. இந்த அடிப்படையில் சித்திரை மாதம் மேஷ ராசி சூரிய பகவான் பிரவேசமாகும் நேரம் காலம் அடிப்படையில் சித்திரை புத்தாண்டு உதயமாகின்றது.
சூரிய சந்திரனை அடிப்படையாகக் கொண்ட காலக்கணிப்பீடு பஞ்சாங்கங்களில் விவரமாக குறிப்பிடப்படுகின்றன.
பத்மன் ஐயர், வெலிங்டன் – (Pathman Iyer, Wellington)