என் உயிரின் இருள் சூழ்ந்த காலத்தில்…
பரிதாபத்தின் பாழ்பட்ட நிலத்தில்…
ஒளிவீசும் தெய்வத் தீபமென அவள் தோன்றினாள் — என் தாய்.
அவள் கரங்கள் பரமனின்
வரங்களென என் துயரத்தின் நெருப்பை
சீற்றமின்றி அணைத்தன.
என் கண்களி ல் வழி ந்த
கண்ணீரி ன் உப்பு அவள் உள்ளத்தி ன்
ஆழத்தி ல் அமுதமெ ன கரை ந்தது.
என் மனம் நொறுங்கி படர்ந்த பாழில் விழுந்தபோது,
அவள் சொற்கள் பழமையான வேத மந்திரங்களென
என் உள்ளத்தை மீண்டும் உயிர்த்தெழச் செய்தன.
என் பாதை கற்களால் காய்ந்தபோது,
அவள் இதயம் பாதையாக விரிந்து
என் பயணத்தை தன் உயிரால் காத்தது.
உலகம் என்னை மறந்தபோதும், அவள் மூச்சின்
ஒவ்வொரு துடிப்பிலும் என் பெயர்
பிரார்த்தனையென ஒலித்தது.
அவள் அன்பு, அது காலத்தைக் கடந்த
தெய்வத்தின் சுவடு, அது உயிரின் முதற்பாடல்,
அது பிரபஞ்சத்தின் மௌனமான அருள்!!
George Niroshan Jeyaraj






