ஒரு ஊரில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான். அவன் தினமும் உப்பு மூட்டைகளை ஒரு கழுதையின் மேல் ஏற்றிக் கொண்டு பக்கத்து நகரத்தில் விற்று வியாபாரம் செய்து வந்தான்.அந்த வழியில் ஒரு ஆறு இருந்தது. அதைக் கடந்து தான் அவன் தினமும் செல்ல வேண்டும்.
ஒரு நாள் வழக்கம் போல் அந்த வியாபாரி உப்பு மூட்டைகளை கழுதையின் மேல் ஏற்றிக் கொண்டு வியாபாரம் செய்ய கிளம்பினான். அப்போது அவன் அந்த ஆற்றைக் கடக்கும் போது அவனுடைய பொல்லாத நேரம் கழுதையின் கால் வழுக்கி அந்த கழுதை ஆற்றில் விழுந்தது.
தண்ணீரில் கழுதை விழுந்த போது அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டைகள்
தண்ணீரில் நனைந்தது.அதனால் உப்பு கரைய ஆரம்பித்தது.வியாபாரி கழுதையை மெல்லத் தூக்கினான். உப்பு
கரைந்து பாதி சாக்கு பை மட்டும் கழுதையின் மேல் நின்றது. அதனால் கழுதைக்கு அதிக பளு இல்லாமல் மிகவும் எளிதாக நடக்கத் தொடங்கியது.
கழுதைக்கு மிக்க சந்தோஷம் ஆனால் அந்த வியாபாரிக்கு அதிக நஷ்டம். அவனால் வியாபாரம் செய்ய முடியாது போனதால் வேறு வழி இல்லாமல் கழுதையை கூட்டிக் கொண்டு
தன்னுடைய ஊருக்கு கிளம்பினான்.
அடுத்த நாள் அந்த வியாபாரி வழக்கம் போல் உப்பு மூட்டைகளை கழுதையின் மேல் ஏற்றிக் கொண்டு வியாபாரம் செய்யக் கிளம்பினான்.
கழுதைக்கு உப்பு முட்டையின் பாரம் அதிகமாக இருந்ததால் அதற்கு அயற்சியாக இருந்தது. ஆற்றின் பாலத்தின் மீது செல்லும் போது கழுதைக்கு ஒரு யோசனை தோன்றியது.
முன்றைய தினம் நடந்தது ஞாபகம் வந்தது.உடனே கால் தவறி விழுவது போல் ஆற்றில் விழுந்தது.
அதனால் உப்பு மூட்டைகள் நனைந்து
உப்பு கரைந்ததால் அதன் பளூ மிகவும் குறைந்து விட்டது. கழுதை சந்தோஷத்தில் விரைவாக நடக்க ஆரம்பித்தது. ஊரை அடைந்தபோது
வியாபாரிக்கு உப்பு இல்லாமல் வியாபாரம் செய்ய இயலவில்லை . மிகவும் வருத்தம் அடைந்தான்.
இதே தந்திரத்தை கழுதை தொடர்ந்து செய்து வந்தது.அதனால் வியாபாரி மிகவும் வறுத்துப்பட்டான்.
அடுத்த நாள் வழக்கம் போல அந்த வியாபாரி உப்பு மூட்டைகளை கழுதையின் மீது ஏற்றிக்கொண்டு கிளம்பினான்.எப்படி உப்பு மூட்டைகள் காணமல் போகின்றன என்று யோசனை செய்து கொண்டு வந்தான்.அவன் கழுதையின் செயல்களை கவனமாக பார்த்துக் கொண்டு வந்தான்.
ஆறு வந்தவுடன் கழுதை தண்ணீரில் விழுவதை பார்த்தவுடன் அதன் தந்திரத்தை தெரிந்து கொண்டான்.
கழுதைக்கு ஒரு பாடம் கற்பிக்க நினைத்தான்.
மறு நாள் உப்பு மூட்டைகளூக்கு பதில் பஞ்சு மூட்டைகளை கழுதையின் மேல் ஏற்றினான். வழக்கம் போல் ஆறு வந்தவுடன் கால் தடுமாறி தண்ணீரில் விழுந்தது அந்த தந்திரக் கழுதை.பஞ்சு மூட்டைகள் தண்ணீரில் வீழ்ந்த உடன் மிகவும் கனமாக ஆகியது.கழுதை நடப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டது. வியாபாரிக்கு தன் தந்திரம் தெரிந்து விட்டது அறிந்து வெட்கம் அடைந்தது.ஒரு நல்ல முதலாளியிடம் இப்படி நடந்து கொண்டடோமே என்று வேதனை அடைந்தது அந்தக் கழுதை.
இனி மேல் நேர்மையாக நடந்து கொள்ள முடிவு செய்தது.
ஆகவே குழந்தைகளே நாம் எப்போதும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.அப்படி இல்லை என்றால் ஒரு நாள் நம்முடைய நிலமை தெரியவரும் போது, நாம் வெட்கி தலை குனியும் நிலை வரும்.
குமுதம் சதாசிவம்.
Written by : Kumudham Sadasivam – Auckland